Posts

Showing posts from August, 2023

அகிலத்திரட்டு அம்மானை

Image
      அகிலம் கல்விச்சாலை        அகிலத்திரட்டு அம்மானை  மற்றும்  அருள்நூல்   பட்டயப் படிப்பு   முதல் பருவம் (SEMESTER Day 1 அகிலத்திரட்டு அம்மானை  காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிக் காரணம் போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன் சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றிப் பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகிச் சான்றவர் தமக்கா யிந்த தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன் சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே தவமே   தவமே தவக்கொழுந்தே தாண்டவ சங்காராதமியே - எங்களுட பவமே பவமே பல நாளுஞ் செய்த பவமறுத்துன் அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய் சிவசிவ சிவசிவா அரகர அரகரா அலையிலே துயில் ஆதிவராவர் ஆயிரத்தெட்டாண்டினி லோர்பிள்ளை சிலையிலே பொன்மகர வயிற்றினுள் செல்லப்பெற்...